மும்பையில் தமிழர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா

மும்பை மும்பையில் தமிழர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திர திருவிழா  மும்பையில் உள்ள தமிழர் கோவில்களில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 31–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தினமும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மும்பை மலாடு மேற்கு, ஒர்லம், சிவகாமி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று பக்தர்கள் மார்வே கடற்கரைக்கு சென்று அங்கிருந்து காவடி எடுத்தும், பால் குடம் எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.…

Read More

குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு

மும்பை குருத்தோலை ஞாயிறையொட்டி மும்பையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். குருத்தோலை ஞாயிறு ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு 40 நாட்களுக்கு முன் உபவாசம் இருந்து ஜெபம் செய்ததாக பைபிள் கூறுகிறது. இதில், ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின வார ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மும்பையில் உள்ள தமிழ் தேவாலயங்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் வீதிகளில் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு பவனி வந்தனர். அப்போது அவர்கள் கிறிஸ்தவ பாடல்களை பாடியும், தேவ வசனங்களை வாசித்தவாறும் சென்றனர். பவனி முடிந்தவுடன் ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தமிழ் ஆலயங்களில் நடந்த குருத்தோலை சிறப்பு வழிபாட்டில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு திருப்பலி தாராவி காலகில்லா…

Read More

புல்லட் ரெயில் திட்டத்திற்கு பாந்திரா–குர்லா காம்ப்ளக்சில் நிலம் வழங்க மராட்டிய அரசு ஒப்புதல்

மும்பை புல்லட் ரெயில் திட்டத்திற்கு பாந்திரா–குர்லா காம்ப்ளக்சில் நிலம் வழங்க மராட்டிய அரசு ஒப்புதல் தெரிவித்து உள்ளது. புல்லட் ரெயில் மும்பை– குஜராத் மாநிலம் ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் விட திட்டமிடப்பட்டு உள்ளது. 508 கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்படும், இந்த புல்லட் ரெயில் வழித்தடத்தில் 12 ரெயில் நிலையங்கள் அமைகிறது. இதில் மராட்டிய எல்லையில் 4 நிலையங்களும், குஜராத் எல்லையில் 8 நிலையங்களும் அமைகிறது. இந்த கனவு திட்டம் ரூ.97 ஆயிரத்து 636 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 81 சதவீத நிதியை ஜப்பான் கடனாக கொடுக்கிறது. மராட்டிய மற்றும் குஜராத் மாநில அரசுகளும் நிதி பங்களிப்பு செய்ய உள்ளது. மும்பை– ஆமதாபாத் ஆகிய இரு நகரங்கள் இடையே வழக்கமாக 7 மணி நேரத்தில் பயணிக்க முடிகிறது. புல்லட் ரெயில் விட்டால்,…

Read More